நாத்திகன் என்பவன் யார்?  

Posted by THE UFO



கடவுள் இதை செய், அதை செய்யாதே, அப்டீன்னு சொல்றார். சொல்றாரா?
அச்சச்சோ, கடவுள் சொல்லிட்டார்பா. அப்டியே கட்டுப்பட்டேன்பா என்கிறான் ஒர்த்தன். இவண் யாரு? ஆத்திகன்.

'நீ என்னடா சொல்றது, நான் என்னடா கேக்குறது'ன்னு 'நான் செய்வேண்டா' அப்டீன்னு தடுக்கப்ப்ட்டதை செய்றான். அவன் யாரு? சொல்லுமா. அவன் யாரு? அவன்தான் நாத்திகன்.

அப்பாவி மக்களை சொல்லாதேன்னு கடவுள் சொல்றார். அருவா, கத்தி எல்லாம் போயி இப்போ ராணுவத்து ஆர் டி எக்ஸ் ஐ கூட்டாளி கர்னல் மார் மூலமா களவாண்டு குண்டு வெச்சி அப்பாவி பொதுமக்களை இவண் கொல்றான். இவன் யாரு? நாத்திகன். ஆனாலும், ஜெய் ஸ்ரீராம் னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

விபச்சாரம் செய்யாதே, வட்டி வாங்காதே, குடிக்காதே, கொலை செய்யாதே, திருடாதே அப்டீன்னு சொல்றார் கடவுள். நீ என்னாப்பு சொல்றதுன்னு, ஒருத்தன் அதெல்லாம் செய்றான். அவன் யாரு? நாத்திகன். அல்லாஹு அக்பர்னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

கொள்ளை அடிக்காதே, ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தை காட்டு ன்னு கடவுள் சொல்றார். அதை கேட்காமல், நீ போயா லூசுன்னு இவண், அவனை அடிச்சவனுடைய நாட்டையே அழிக்கிரான். அடுத்தவனை அடிமைப்படுத்தி அவன் நாட்டு பொருளாதாரத்தையே பேடன்ட் போட்டு சுரண்டுறான். இவண் யாரு? நாத்திகன். ஓ ஜீசஸ் ஐ லவ் யூ ன்னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

இப்போ சொல்லுங்க... நூத்துக்கு 99.9999999999999% இந்த உலகத்துல கேடு கெட்டவன் ஆரு? வேற யாரு? நாத்திகன் தான்.

ஒருவன் கெட்ட செயல் செய்யும்போதுதான் அவன் நாத்திகன் என்றே உலகத்துக்கு தெரிய வருது. அவன் இது நாள் வரை ஆத்திகன் வேஷத்துல இருந்து இருக்கான்னும் புரியுது. கர்னல் புரோகித், சாத்வி, அசிமானந்தா, அஜ்மல் கசாப், ஒசாமா பின் லேடன், அப்பன் ஜார்ஜ் புஷ், மகன் புஷ் மாதிரி.

ஆத்திகன்- கெட்டவனா மாற வாய்ப்பு இருக்கு. நாத்திகன்- நல்லவனா மாற வாய்ப்பு கம்மி. மனசாட்சிக்கு பயந்தாதான் உண்டு. அவரவர் மனசாட்சி பத்தி அவரவருக்கு நல்லாதான் தெரியுமே.

இதே கண்ணோட்டத்தோட அடுத்து படிங்க.

திருடன் திருடுவான்.
எல்லா திருடனும் திருடுவான்.
போலிஸ் திருடுரவனை புடிப்பான்.
ஆனா எல்லாரும் அப்டின்னு சொல்ல முடியாது.

சில போலீஸ், 'பொய் கேசு போடுவேன்'னு மிரட்டி நம்ம கைக்காசை மாமூல் வாங்கிட்டு நம்ம பாக்கட்டை போண்டி ஆக்கிட்டு போறானா இல்லையா?

இவண் போலிசா? திருடனா? காக்கி யூனிபார்ம் போட்ட திருடன்னு சொல்வீங்களா மாட்டீங்களா? ஆனாலும், ஒருத்தன் திருடனா இருந்தா திருட அதிக வாய்ப்பு இருக்கு.

போலிசா இருந்தா வாய்ப்பு கம்மி. பப்ளிக்கா திருட முடியாது. நைசாத்தான் பண்ண முடியும். கூட யாரும் இல்லைன்னா திருடலாம். தெரிஞ்சவங்க கிட்டே மாமூல் கேட்க முடியாது. உயர் அதிகாரி இருந்தா முடியாது. தனி அறையிலே அல்லது ஒதுக்கு புறமா கூட்டி போய் வசூளிக்கணும். கேமரா மொபைல் வந்ததால இப்போ பப்ளிக்கா மாமூல் கேக்குறது குறைஞ்சு இருக்கு.

இதெல்லாம், இந்த கட்டுப்பாடு தடைகள் எல்லாம் திருடனுக்கு இருக்கா?

இப்போ சொல்லுங்க,
நிஜமான நாத்திகனா?
பொய்யான ஆத்திகனா?
எவன் ரொம்ப மோசம்?

(பதில் அப்புறம். அதுக்கு முன்னாடி, ரெண்டு பெரும் நாத்திகன் தானே)

This entry was posted on 10:53 AM and is filed under , . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments